Publish Date: Thu, 28 Feb 2019 (15:00 IST)
Updated Date: Thu, 28 Feb 2019 (15:18 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எந்த விஷயங்களையும் தனது விருப்பம் போல் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்த மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல் துறையினருக்கு பேச்சில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாளை வியாழக்கிழமை அன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.