Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது ஜல்லிக்கட்டுக்கான யுத்தங்களின் காலம்..

Advertiesment
Jallikattu
, வியாழன், 12 ஜனவரி 2017 (15:46 IST)
என் பாட்டன் உப்பு சத்தியகிரகத்தில் ஈடுபடவில்லை. என் அய்யன் மொழி போரில் பங்கேற்கவில்லை. ஆனால் நம் மாணவ தலை முறைக்கு மிகச் சிறப்பான வாய்ப்பு அமைத்து இருக்கிறது இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நீதி மன்றங்கள் எல்லாம் லாபி செய்யும் இடங்கள்  ஆனப் பிறகு அவை  வழங்கும்  தீர்ப்புகள் என்ன துளசி செடியின் பரிசுத்தமா என்ன?


 
 
அரை பறையை! மொழியைக் காக்க அல்ல, இனத்தைக் காக்க அல்ல, பண்பாட்டை கலாச்சாரத்தை காக்க தொடங்கி இருக்கிறது ஒரு யுத்தம். மேன்மை பொருந்திய கணம் நீதிபதிகளுக்கு, எங்கே  தெரியும் எங்களின் பண்பாடு, கலாச்சாரம்?  மக்களின் உணர்வுகளை சட்ட புத்தகங்களில் தேடினால் இப்படி தான். தீர்ப்புக்களை எப்போதும் சட்டப் புத்தகங்களில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
 
எங்களின் நடை முறைகளை பின்பற்ற, உங்களிடம் நாங்கள் கை கட்டி நிற்க வேண்டுமா? கணம் நீதிபதிகளே! உங்கள் உத்தரவுகள் என்ன தெய்வத்தின் வாக்கா? 
 
யாரை திருப்திபடுத்த தீர்ப்பு எழுதுகிறீர்கள்? உங்கள் பேனாவில் என்ன மை ஊற்றி எழுதுகிறீர்கள்?
  
இந்த தீர்ப்புக்கு பயந்தவன் தமிழன்  அல்ல. 
 
வெல்க  தமிழ்... 
 
வெல்க ஜல்லிக்கட்டு...
 
வெல்க மாணவம்....
 
Jallikattu
 
 
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி....