Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 1700ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (19:30 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,697 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,697 பேர்களில் 232 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 27 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,594 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 25,93,074 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,56,850 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 453,01,370 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெருங்கி வருகிறது பெபின்கா சூறாவளி; 100க்கும் மேலான விமானங்கள் ரத்து..!

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திருமாவளவன்.. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பாரா?

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: பிரசாந்த் கிஷோர்

டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! கொலை செய்ய முயன்ற மர்ம நபர் யார்?

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments