Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல்: எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 பேர் அனுமதி!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (14:19 IST)
குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் பரவி வருவதை அடுத்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மழை வெயில் என மாறுபட்ட பருவமழை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த மருத்துவமனையில் 300 படுக்கைகள் இருக்கும் நிலையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதாகவும் தற்போது கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை மட்டுமின்றி மதுரை திருச்சி கோவை நெல்லை ஆகிய பகுதிகளிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி குறித்து கேலி சித்திரம்.. காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்..!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியவர் அடித்துக் கொலை.. கிரிக்கெட் போட்டி நடந்த இடத்தில் விபரீதம்..!

இன்று அட்சய திருதியை.. அதிகாலை முதலே நகைக்கடைகளில் குவியும் கூட்டம்..!

பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் பட்டியலில் வீர மரணம் அடைந்த வீரரின் தாயார்.. அதிர்ச்சி தகவல்..!

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. புகுந்து விளையாடுங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments