கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த 10ஆம் வகுப்பு மாணவிகள்! அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:54 IST)
2 பத்தாம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழக ஆந்திரா எல்லையில் பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் அடிக்கடி பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது தனிப்பட்ட முறையில் வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது.
 
இந்த வீடியோவை காட்டி இரண்டு மாணவிகளிடமும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மாணவிகள் பணம் கொடுக்க முடியாததால் தங்களை மிரட்டும் கல்லூரி மாணவனை கொலை செய்ய முடிவு செய்தனர் 
 
இதனை அடுத்து கூலிப்படையை ஏவி மணிகடன்னை கொலை செய்ததாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த போலீசார் தற்போது மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments