Publish Date: Tue, 08 Nov 2022 (20:09 IST)
Updated Date: Tue, 08 Nov 2022 (20:11 IST)
சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளம். சிறுவன் பரிதாப பலி
சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்து பலியான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பள்ளத்தில் தண்ணீர் இருந்தது
இந்த நிலையில் சிறுவன் ஒருவன் அந்த பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெயர் வினோத் என்றும் அவருக்கு பதினோரு வயது என்றும் கூறப்படுகிறது