Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6000, தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (20:29 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 12,895 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,00,286 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 12,895 பேர்களில் 6,186 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 12 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை  36,855 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,808 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 27,12,096 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,48,308 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,85,27,532 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments