Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் +2 மதிப்பெண்கள் வெளியீடு !!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:01 IST)
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 

 
பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் கடந்த சில வாரங்களாக கணக்கிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50%, செய்முறை தேர்வில் 30% மற்றும் பிளஸ் 1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 20 % என கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கு இன்று www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dg2.tn.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது என அமைச்சர் அனில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments