Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையால் 131 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (15:39 IST)
கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து கோயம்பேடு சந்தையால் இதுவரை மொத்தம் 131 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த நாட்களுக்கு முந்தைய நாள் காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர்.. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக சுமார் 50ஆயிரம் பேர் கூடியதாகவும், தனிமனித இடைவெளி, சமூக விலகல், மாஸ்க் அணிதல் ஆகிய அரசின் அறிவுரை காற்றில் பறக்கவிடப்பட்டதால் ஒருவாரம் கழித்து இதன் அபாயம் தெரியும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் கோயம்பேடு சந்தையால் நேற்று சுமார் 50 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கோயம்பேடு சந்தையால் இதுவரை மொத்தம் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 52 பேர், கடலூரில் 17 பேர், அரியலூரில் 22 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 20 பேர், பெரம்பலூரில் ஒருவர் என கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 131 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments