Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருக்கிறது. கோடை விடுமுறைக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதியரசர் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து உயர் நீதிமன்றம் செயல்பட துவங்கியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ரம் நாளை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை திமுக, தினகரன் தரப்பு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆகியோர் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.