Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 - புத்தாண்டு பிறக்குது... புத்தெழுச்சியுடன் வரவேற்போம் -சினோஜ் கட்டுரைகள்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (21:39 IST)
இந்த ஆண்டின் ஒவ்வொரு தினமும் சிறந்த நாள்தான்; இதை உங்கள் இதயத்தில் எழுதிவையுங்கள் என்று அமெரிக்க எழுத்தாளர் வால்டோ எமர்சன் கூறியதுபோல்  ஒவ்வொரு நாளும் நம் வளர்ச்சிக்கும்,  உயர்வதற்குமான பாதையை இந்தப் பூமிக்கோள் போட்டுக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

பாதைகள் மாறினாலும் பயணங்கள் மாறாது என்பது மாதிரி, இந்தப் பூமிப்பந்தின் எந்தப் பக்கத்தில் உயிராகப் பிறந்திருந்தாலும், அவைகள் தன்  உயிரைக் காக்கப் பிழைப்பு நடத்தை ஓடியே ஆக வேண்டிய கட்டாயமுண்டு.

விலங்குகள் வேட்டையாடுவதும், பறவைகள் பறந்து விதைகள் உண்பதும், மனிதன் தன் அடுத்தக்கட்ட பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள முயற்சித் துடுப்புகளைப் போடவும் எத்தனிப்பது இயல்புதான்!


ALSO READ: ஏழை தாயின் காணிக்கையும் இயேசுவின் திருமொழியும்!- சினோஜ் கட்டுரைகள்
 
''பருவகாலம் மாறலாம்,   நம்மோடு பழகியர்கள் மாறலாம்,  நேற்றிருந்த மதத்தைக் கடந்து இன்று வேறொரு மத்திற்கு மாறலாம், திகில் பட பேய்களைப் போலவும், ஆக்சன் பட வில்லன்கள் போலவும் இப்போது உலகில் பல உருமாறிகளாகத் திரிகின்ற கொரோனாவாகட்டும்,  பயங்கர விபத்துகள் வந்து  ஒரு மரணத்தைக் கண்முன் காட்டிச் சென்ற நிகழ்வாகட்டும், அதிர்ச்சிக்குரிய  ஆபத்துகளாகட்டும், அன்றாடம் நடக்க வேண்டியவை நடக்காமல் ஏமாற்றத்தை மணற்புயல்போல் வாரித் தந்ததாகவிருக்கட்டும், ஆசைப்பட்டது அகப்படாமல் அடிமனதிலிருந்து அடியோடு கழன்று போனதாகட்டும், விருப்பமானவை கையில் சிக்குவது போலிருந்து எதோவொரு காரணத்தால் நம் கையில் தொற்றாமலிருப்பதாகட்டும் இவையெல்லாம் நம்மை  அதைவிடச் சிறந்ததொன்றை நமக்குக் காலம் வேறொரு வடிவில் கடவுளின் பரிசுபோல் கிடைக்கச் செய்யுமென்ற பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், தேவையற்றவைகளின் மன அரிப்புகளில் இருந்து  நிரந்தரமான நிம்மதியை அடையலாம்.''

இந்தப் பிறப்பை நாம் தேர்ந்தெடுக்கவில்லை ஆயினும், இந்த வாழ்க்கையை நாம் வளர்ந்த பின் நாம் தேர்ந்தெடுப்பதற்கானவொரு சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நட்சத்திரங்கள் மேகவலையை விரித்தாலும், அதில் சிக்காமல் தனக்கான பாதையில் தெளிவான பயணத்தை மேற்கொள்ளும் நிலவுபோல் நாமும் தெளிந்த மனதைக் கொண்டால் எந்தப் பிரச்சனையும்  டிராகனைப் போன்று வடிவெடுத்து வந்தாலும் சிறுவண்டுபோல் வந்தாலும் நம் மனதை இலேசாக்கி நம்மால் எத்தகைய இக்கட்டான சூழலிலிருந்தும் விடுபட முடியும்.

ALSO READ: திறமையே வெற்றிக்கு காரணம்! சினோஜ் கட்டுரைகள்
 
புத்தாண்டு தினமென்பது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின்  பிறந்த நாளென்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லேம்ப் கூறியதுபோல் காணும் திசையெங்கும் இன்று மனிதன் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிகள் காணக்கிடைக்கிறது.,

இதைப் பயன்படுத்தி நாம் அடுத்த தலைமுறைக்கான வழிவகைகளைச் செய்ய முயலுதல் வேண்டும்!

இன்று  நள்ளிரவு பனிரெண்டு மணிமுதல் தொடங்கிய புத்தாண்டு ஒரு 24 மணி  நேரத்தில் மட்டும் கொண்டாட்டத்திற்குரியதாக கொள்கின்ற இளைஞர்களுக்கும் இனிவரும் காலத்தில் நாமென்ன சாதிக்கத் திட்டமிட்டிருக்கிறோம், இவ்வாண்டு ஒவ்வொரு துறைகளிலும் இருந்து சிறந்த 10 இடங்களைக் பட்டியலிட்டு இதழ்களும், ஊடகங்களும் சமூக வலைதளங்களும்  நமக்குத் தகவல்களாகக் கடத்தியது மாதிரி இனித் தொடங்கவுள்ள 2023 ஆம் ஆண்டில், நாம் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அல்லது, ஏற்கனவே தேர்ந்தெடுத்த துறைகளில் இருந்து நம்மாலான எல்லா சிறந்த திறமைகளைக் கொடுத்து, இதற்கடுத்த ஆண்டிலாவது அந்த டாப் 10 இடங்களில் நாமும் வர முயற்சிப்பது ஒன்றும் முடியாததல்ல.


உலகில் டாப் பத்து இடங்களில் வருவதற்குப் பதிலாக, இத்தனை புதுவருடங்களில் மற்றவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்தவர்களாகிய நாமும், இதற்கு முன் இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவு இம்முறை நம் திறமையைச் செதுக்கி வந்துள்ளவற்றைப் பட்டியலிட்டு, ஓரளவு முன்னேறியுள்ளதற்காகச் சந்தோஷப்பட்டுக் கொள்வோம்.

இது இப்படியே சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், அத்துறையில் நாமும் வளார்வோம், நம் திறமையும் பல மடங்கு அதிகரித்து, உலகில் உள்ள உலகத் திறமையானவருக்கு நிகராகப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கும்.

ஆனால், இதெல்லாம் ஒரே நாளில் சினிமாவில் வரும் ஹீரோக்களைப் போல அடையத்துடிப்பதுதான் சாதனைக்குத் தடைக்கல்லாக இருக்கும்.

எதார்த்தத்தையும், நிஜத்தையும் ஏற்கும் மனப்பக்குவத்தையும்,  நிதர்சனமானவற்றை ஏற்கின்ற மனோலயத்தையும் பெற்றுக்கொள்கிறபோது, எதையும் செய்வதற்காக சாத்தியம்  நமக்கு வாய்க்கும்!

எது வரினும் அதை ஏற்போம்!

நம்மை எதிர்ப்படை நாமும் துணிந்து எதிர்ப்போம்!

சாதிப்பதற்காக வாய்ப்புகள் இருக்கும்போது சாதிப்போம்! அந்த வாய்ப்புகள் ஏதும் கண்முன் இல்லையென்றால் நமக்கான வாய்ப்பு மலையை நாமே கற்களை அடுக்கி அடுக்கி  உயர்மலையாக்குவோம்!

அதில் ஏறி நின்று உலகைப் பார்க்கும்போது, இவ்வுலகம்  நம்மைப் பிரமித்துப் பார்க்கும்!

நம்மைச் சாதனைச் சிகரமென்று வியக்கும்!

இதற்கு உழைப்பை மட்டும் மூச்சுக்காற்றாக கொண்டியங்குவோம்!

இழப்புகளை எப்போதும் நியாயப்படுத்த முடியாது; எத்தனையோ பேரிழப்புகளையும், கொடூர உயிர்க்கொல்லிகளையும் இந்த உலகம் இதற்கு முன் கண்டுள்ளது. அதனால், இப்போதுள்ள மருத்துவம், விஞ்ஞானம், மனித  ஒற்றுமை, மனோதிடம், அரசியல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அடுத்த அலையான கொரோனா எனும்  வைரஸ் கொடூரனையும் வெற்றிகொள்வோம்!

எல்லாவற்றையும் அனுபவத்தின் வாசலில் நின்று பார்க்கும் போது, வானம் மாதிரி எதார்த்த உலகினைப் புரிந்துகொள்ள முடியும்!

2022 ஆம் ஆண்டையும் நாம் அப்படியே எடுத்துக்கொள்வோம்! நாளை விடியும் புத்தாண்டிற்கு     நமது கரவொலி எனும் ஆளத்தி எடுத்து; திரிஷ்டி சுற்றுவது மாதிரி   நம் முப்பத்தியிரண்டு பற்கள் தெரிய 2023 ஆம் ஆண்டை வரவேற்போம்!

புத்தாண்டு பிறக்கையில் நம் புத்தெழுச்சியுடன் அதை வரவேற்று வானில் சாதனைப் பறவைகளாகப் பறக்கச் சபதம் எடுப்போம்!

அகம் மகிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன்

#சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments