Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமில்லாமல் அரங்கேறும் சாதிய கொலைகள் - நெல்லையில் 5 மாவட்ட போலீசார் குவிப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (14:24 IST)
நெல்லையில் சீவலப்பேரியில் கோவில் பூசாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து  நேற்று பாளையம்கோட்டை சிறையில் ஒருவர் அடித்து கொலை கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
தொடர்ந்து இப்படி சத்தமில்லாமல் அரங்கேறும் சாதிய கொலைகள் அங்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதம் மேலும் நடைபெறாமல் இருக்க நெல்லையில் 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். 

சீவலப்பேரி பூசாரி கொலை எதிரொலியாக நெல்லை பாளையம்கோட்டை தெற்கு பஜார் அழகு முத்துக்கோன் சிலை அருகே பொது மக்கள் கூடி வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது அப்பகுதி மக்களை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

ஒரே நாளில் இரண்டாவது முறை தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments