Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான் குளம் மரண வழக்கு.. எஸ்.ஐ உள்ளிட்ட 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றம் !

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (19:52 IST)
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். இந்நிலையில் காவலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேடி பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாற்று கிடந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் முதலில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். 

இந்தியாவே உற்றுப் பார்த்து வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மரண வழக்கில் அவர்களின் குடும்பத்திற்கு ஞாயமும் நீதியும்கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது பிரார்த்தனையும்.

இதற்கிடையே, சாத்தான் குளம் இரட்டை மரணம் தொடப்பாக வழக்கில் சிபிசிஐடி போலீஸா கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.ஐ ஸ்ரீதர், 2 உதவி எஸ்.ஐக்கள், 2 காவலர்கள் என மொத்தம் ஐந்து பேர் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டானர்.

இந்நிலையில்,  சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும், பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments