தமிழகம் : வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ளா சொத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர் ஆய்வாளரக ரமேஷ்குமார் மீது லஞ்சம், வாக்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாருக்குச் சொந்தமான இடையான சாத்து மண்டபம் சாலை, ஊசூர் நெல்லுபாளையத்தில் உள்ள இரு வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில், ரு. 10 கோடிமதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது.முக்கியமாக ரமேஷ்குமாருக்கு 50 வீடுகள் இருப்பதும் ரெய்டில் தெரியவந்தது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ரமேஷ்குமார் மீது வருமானத்து அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு பதிவாகியிருந்த நிலையில், இந்த ரெய்டில் மூலமும் அவர் வசமாகச் சிக்கியுள்ளார்.