சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க இனிமேல் 8 போட வேண்டிய அவசியமில்லை என்றும் பதிவு செய்யப்பட்ட டிரைவிங் பள்ளியில் இணைந்து முறையாக பயிற்சி பெற்றால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இதனால் டிரைவிங் லைசன்ஸ் இருக்கும் பலர் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த முறையை தமிழக அரசு பின்பற்றுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் எட்டு வடிவில் வாகனம் ஓட்டிக் காட்ட வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை செய்து கொண்டு வருவதாகவும் இந்த ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதனால் எட்டு போடாமல் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் நடைமுறை தமிழகத்திற்கு தமிழகத்தில் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது