Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சல்...

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:30 IST)
கரூரில் டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேர்க்கொள்ள வேண்டும் என் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

கரூர் ஏமூர் காலனியை சேர்ந்த கோபி உஷா தம்பதயினரின் மூத்த மகள்  வைஷ்ணவி வயது 9, அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த வாரம்  தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் .அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். கரூர் பாலம்மாபுரத்தில் உள்ள மின்மயானத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காதது உயிரிழப்புக்கு காரணம் என  பெற்றோர் கூறுகின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் ஏமூர் புதூர் காலனியில் சிறுமி வைஷ்ணவி உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக தற்போது சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் முகாம் அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments