Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரின் கைவரிசையால் பரபரப்பு

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (09:19 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம், நியூட்ரியோனா திட்டத்தை எதிர்த்து போராட்டம் என எங்கு பார்த்தாலும் போராட்டமயமாக உள்ளது.

இந்த நிலையில் திமுக இந்த போராட்டங்களில் வெகுதீவிரமாக உள்ளது. நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் இன்று முதல் 4ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள், 5ஆம் தேதி முழுகடையடைப்பு போராட்டங்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் போராட்டங்களை திட்டமிட்டு வருகிறார்

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன்கால் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காஞ்சிபுரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments