சென்ற வருடம் முதல்வருக்கு எதிராக செயல்பட்டதாக 18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம், ஒசூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டது.எனவே மொத்தம் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த பலரும் வலியுறுத்தி வந்தனர்.
உயர் நீதிமன்றமும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனவே இந்த உத்தரவை ஏற்று தேர்தல் ஆணையமும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தீர்மானித்தது.
இந்நிலையில் இந்த 21 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இன்று கட்சி தலைமை இன்று அதற்கான நேர்காணலை நடத்திவருகிறது. இந்த நேர்காணலை திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆகியோர் நடத்தி வருகின்றனர்.