தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (08:15 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிய மனு  மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி 17 போலீஸார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 17 வயது ஸ்னோலினின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஸ்னோலின் தாய் போலீசார், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments