Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:12 IST)
கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது அதன் பிறகு இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக IPC 1860 உட்பிரிவு 171G-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
 
சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments