Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களை கேவலமா பாக்குறாங்க!.. ஓட்டு போடுங்க!.. ஆ.ராசா பிரச்சாரம்!...

Advertiesment
raja vijay
2021ம் வருடம் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக மாறினார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விஜய் முதல்வராகிவிட்டார்.

ஒருபக்கம் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். எனவே அவரால் சட்டசபைக்கு கூட வர முடியாமல் போய்விட்டது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் திமுக எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும், தவெக அரசின் மீதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தும் அவர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து பேசி வருகிறார்...

ஒருபக்கம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற 6 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய், எடப்பாடி பழனிச்சாமி, சீமான், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த எம்.பி ஆர்.ராசா பொதுமக்கள் முன்பு பேசிய போது ‘டெல்லியில் உள்ளவர்கள் திமுகவை பார்த்து பயந்தார்கள்.. ஆனால் இன்று ஒரு நடிகரிடம் போய் ஆட்சியை கொடுத்து விட்டீர்கள் என்று எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்.. அதை திருத்த தாராபுரம் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என பேசி வாக்குகள் சேகரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் முதல் எல்.என்.ஜி. ரயில்.. அமித்ஷா தொடங்கி வைப்பு...