ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை மத்திய அரசு விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போதைய சட்ட நிர்வாகத்தில் மாற்றம் செய்ய ஆகிய இணையதளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் தேவையா என்பது குறித்து தங்களது கருத்துக்களை https://onoe.gov.in இணையதளத்தில் சென்று கூறலாம். அல்லது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை sc-hic@gov.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.