Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எப்படியாவது எடையை குறைக்கணும்’; மருந்து எடுத்த இளைஞர் பலி!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (11:45 IST)
காஞ்சிபுரத்தில் உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் புத்தாண்டு சமயங்களில் இளைஞர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கவும், ஃபிட் ஆக வைக்கவும் விரும்பி ஜிம் உள்ளிட்டவற்றில் சேர்வது வாடிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் சூர்யாவும் தனது உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார்.

இதற்காக சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை எடை குறைப்பதற்காக அணுகியுள்ளார். அவர்கள் சில மருந்துகளை அளித்து தினம்தோறும் சாப்பிட சொல்லியுள்ளனர். அதன்படி சூர்யாவும் சாப்பிட்டு வர சில தினங்களில் வேகமாக எடை குறைய தொடங்கியுள்ளது.

ALSO READ: ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால்.. துரை வைகோ எச்சரிக்கை

இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு சூர்யாவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது. நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பிற்கு தனியார் நிறுவனம் கொடுத்த மருந்தே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை குறைக்க விரும்பி மருந்து சாப்பிட்ட இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments