Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக செயற்குழு கூட்டம் டிடிவி. தினகரன் அறிவிப்பு

Webdunia
புதன், 24 மே 2023 (21:50 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் டிடிவி. தினகரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு டிடிவி. தினகரனால் தொடங்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இக்கட்சியில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்திருந்தனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில்  நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமமுக செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பை தினகரன் வெளியிட்டுள்ளார்.

அதில்,   ‘வருகின்ற ஜூன் 7ஆம் தேதி சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 07.06.2023 புதன்கிழமை அன்று 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற காலை உள்ளது.

அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments