Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பச்சை நிற பால் நிறுத்தப்படவில்லை.. விலை உயர்வும் இல்லை! - ஆவின் நிர்வாகம் விளக்கம்!

Prasanth Karthick
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (16:18 IST)

ஆவின் பச்சை நிற பாலை பெயர் மாற்றி மேலும் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுகுறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனையாகி வருகின்றன. 4 வேறு வண்ணங்களில் வேறு வேறு கொழுப்பு அளவுகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அதில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதம் கொழுப்பு சத்து கொண்டது.

 

பச்சை நிற ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஆவின் க்ரீன் மேஜிக் பால் பாக்கெட்டில், ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் உள்ள அதே அளவு கொழுப்பு மற்றும் பொருட்கள் உள்ளதாகவும், ஆனால் அளவை குறைத்து விலையை அதிகரித்து 900மி.லி பாக்கெட் ரூ.50 என்ற விலையில் விற்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம், பச்சை நிற பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் குறித்து எந்த முடிவும் ஆவின் நிர்வாகம் எடுக்கவில்லை. அதேபோல் புதிய வகை பால் பாக்கெட் விற்பனை எதையும் ஆவின் நிறுவனம் தொடங்கவில்லை. புதிய வகை பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்வது குறித்த ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments