Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா - நாளை விடுமுறை அறிவிப்பு!!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (15:39 IST)
காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக நாளை ஜூன் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை நடைப்பெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக நாளை ஜூன் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ஆயிரம் காளியம்மன் கோயில் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஒரு பழங்கால இந்துக் கோயில். இந்த கோயிலின் மரத்தாலான காளியம்மன் சிலை பிரதான தெய்வத்திற்கு மிகவும் பிரபலமானது.
 
செவி வழி கதையின் படி செங்குந்தா முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பக்தர், கடலோரப் பகுதியில் காளியம்மன் தேவியின் சிலை வைத்து ஒரு பெட்டியை கண்டு எடுப்பதாதாக கனவு கண்டார். அடுத்த நாள் அவர் உண்மையிலேயே ஒரு ஓலைச்சுவடியையும், ஒரு சிலையுடன் இருந்த ஒரு வெள்ளிப் பெட்டியைக் கண்டார்.  
 
அந்த ஓலைச்சுவடி படி தினமும் 1000 சடங்கு பொருள்களுடன் பூஜை செய்வது சாத்தியமற்றது என்பதால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஜை நடத்த சமூகம் முடிவு செய்து, ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், 1000 பொருட்களுடன் ஒரு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 
 
தெய்வதின் சிலை முழுக்க மரத்தினால் ஆனது. சிலையுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஒரு மர பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் காளியம்மன் கோயிலில் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் உள்ள பக்தர்கள் வந்து கலந்துகொள்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments