Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு சிறப்பு ஏற்பாடு: பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (07:46 IST)
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் அவர்கள் மதுரை வருகையையொட்டி மதுரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய சுற்றறிக்கை வெளியிட்ட மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
 
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் இன்னும் ஒரு சில நாட்களில் மதுரைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் வழியில் வரை அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெருவிளக்குகளை சரி படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
 
இந்த சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படி பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும்’ என்று மதுரை மாநகராட்சி ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments