Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளாசி தள்ளிய நெட்டிசன்கள்! விமர்சிப்பவர்கள் தான் தற்குறிகள்- மகேந்திரன்

Advertiesment
மகேந்திரன்
தமிழ் சினிமாவில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். குறிப்பாக, தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில், குட்டி விஜய் சேதுபதியாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய விஷயம் தான் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
 
சென்னையில் சமீபகாலமாக நிலவி வரும் மின்தடை குறித்து அந்த நேர்காணலில் பேசிய மகேந்திரன், "இவ்வளவு நாட்கள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்த மக்கள், ஒரு ஆறு மாசம் கரண்ட் இல்லாமல் இருக்க முடியாதா? உங்களுக்கு மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். முதல்வரை கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?" என்று தடாலடியாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், மகேந்திரனை சமூக வலைதளங்களில் கடுமையாக  வறுத்தெடுத்து வந்தனர்.
 
தன்னைச் சுற்றி இத்தனை விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், மகேந்திரன் பின்வாங்கவில்லை. இந்த சர்ச்சை குறித்து தற்போது அவர் மனம் பேசியபோது,
 
சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படும் குட்டி குட்டி வீடியோக்களை பார்த்துவிட்டு மக்கள் அவசரப்பட்டு முடிவுக்கு வருகிறார்கள். முழு வீடியோவையும் யாரும் பார்ப்பதில்லை, அதுதான் இங்கு பிரச்சனையே! நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் கிடையாது. மின்சார தேவையை சமாளிக்க சோலார் எனர்ஜி தான் சிறந்த வழி என்று நான் கூறினேன். கொச்சின் விமான நிலையம் எப்படி முழுமையாக சோலாரில் இயங்குகிறதோ, அதேபோல நம் மாநிலத்திலும் ஏன் கொண்டு வரக்கூடாது என்பதுதான் என் கேள்வி  என்று கூறினார்.
 
மேலும், உண்மையை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் என்னை விமர்சிப்பவர்கள் தான் தற்குறிகள். நான் பேசிய கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை, இப்போதும் நான் அதில் உறுதியாகவே இருக்கிறேன்  என நெட்டிசன்களுக்கு செம்ம நோஸ்கட் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொன்னதை செய்த முதல்வர் விஜய்!.. நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு!..