Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (09:23 IST)
மதுரவாயலில் நடிகரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நடிகர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகிறது. அவ்வாறு அவரது குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
 
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்(32). சித்தார்த்  ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.. இவரது மனைவி ஸ்மிரிஜா(35). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மதுரவாயலில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்று தூங்க சென்ற ஸ்மிரிஜா, நேற்று காலை அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ந்துபோன சித்தார்த் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்மிரிஜா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதையடுத்து போலீசார் ஸ்மிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி கைது எதிரொலி.. தவெக கொடியை கீழே போட்டு மிதித்த திமுகவினர்

உதயநிதி கைது விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி..

அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரத்தில் அரை மணிநேரத்தில் பேசிய கனிமொழி, இப்போதைய மெளனம் என்ன சொல்கிறது?

திரிஷா என்ன பிரதமரா?!.. நாங்க அப்படித்தான் பேசுவோம்!.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி!..

உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments