Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிதான் பாலிசி; எம்பி சீட் கன்ஃபார்ம்: கஸ்தூரி மரண கலாய் டிவிட்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:15 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யார் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. தற்போது இந்த கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்து வருகிறது. 
 
பாஜக - அதிமுக கூட்டணி இறுதிக்கட்ட பேச்சிவார்த்தையை எட்டியுள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளூமன்ற தொகுதியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு என்ற ஒப்பந்தத்தோடு கூட்டணி உறுதியாகியது. 
 
இந்நிலையில் இந்த கூட்டணியை கஸ்தூரி கேலி செய்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பது பின்வருமாறு, எப்போதுமே பாமகவுக்கு NDA-வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். பாஜக கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு எம்பி பதவி நிச்சயம். வேறு என்ன வேண்டும்? என பதிவிட்டுள்ளார். 
இதற்கு முன்னர், பாமக 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

8 பாஸ்போர்ட், 4 முறை பாகிஸ்தான் பயணம்.. உளவு சொன்னதால் கைதான வாலிபரிடம் விசாரணை..

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments