Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை சீண்டி பார்க்காதீங்க; தாங்க மாட்டீர்கள்: திமுகவுக்கு குஷ்பு எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (16:47 IST)
என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திமுகவை எச்சரித்துள்ளார். 
 
கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்த போது அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவான ஆபாச வார்த்தைகளில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து திமுகவுக்கு குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய குற்றவாளியின் இந்த கேவலமான கருத்தை வைத்து திமுகவில் நிலவும் அரசியல் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளலாம். பெண்களை துஷ்பிரயோகம் செய்தல் அவர்களை பற்றி மோசமான மலிவான கருத்துக்களை பரப்புதல் ஆகியவற்றை திமுக தற்போது பரப்பி வருகிறது 
 
கருணாநிதி இருந்தபோது திமுகவில் இந்த மாதிரி இல்லை, ஸ்டாலின் திமுகவில் தான் இந்த புது திராவிட மாடல் உள்ளது, இது குறித்து நான் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன், இந்த மாதிரி நபர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் தான் புத்தி வரும் என்று கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments