முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் கடந்த சில வாரங்களாக விசாரணை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்தசில நாட்களாக ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆஜாராகி விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் மருத்துவர் ஆணையம் முன் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் கொடுத்தது அவருடைய உடல்நலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். 2016 சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன். என்னுடைய சிகிச்சைக்கு பின்னர் அவருடைய கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார்
ஆனால் ஜெயலலிதாவை அப்பலோவில் அனுமதித்தபின் பலமுறை சந்திக்க முயற்சித்தேன், முடியவில்லை' என்று அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டியளித்துள்ளார்.