Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் அதிமுக-அமமுக தொண்டர்கள் மோதல்: பெண் காவலர் காயம்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (12:47 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றபோது இரண்டு பெரிய திராவிட கட்சிகளை தோற்கடித்து அந்த தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். அதன்பின்னர் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் தான் வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகருக்கு இன்று டிடிவி தினகரன் சென்றார். அப்போது  டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு வந்த அதிமுகவினர் சிலர் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தினகரன் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனையடுத்து அந்த பகுதியில் அதிமுக - அமமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதாக தெரிகிறது. இருதரப்பு கல்வீச்சு சம்பவத்தில் பெண் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசார் இருதரப்பினர்களையும் சமாதானம் செய்த பின்னர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சென்று மக்களை சந்தித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments