Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர், அதிமுகவுக்கு யார் தெரியுமா? பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (11:37 IST)
dmk prasanth
2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவுக்கு ஆலோசனை சொல்ல பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வ தெரிவித்தார் என்பது தெரிந்ததே. அவருடைய ஆலோசனையின்படி தான், ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் உள்பட பல திட்டங்களை திமுக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகக்கு சுனில் என்பவர் அரசியல் ஆலோசனை கூற நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கடந்த  2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு திட்டம் வகுத்த கொடுத்தவர் என்பதும், 2019 மக்களவைத் தேர்தலின் போது திமுகவிற்காக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இவருடைய ஆலோசனையால் தான் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது திமுக, பிரசாந்த் கிஷோரை நோக்கி சென்றதால், அதிமுகவுக்கு ஆதரவாக சுனில் களமிறங்கியுள்ளார். இவர் திமுகவுக்கு வேலை செய்துள்ளார் என்பதால் அக்கட்சியின் பலம், பலவீனம் இரண்டையும் முழுமையாக தெரிந்தவர் என்பதால் திமுகவின் பலவீனங்களை மையப்படுத்தி காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது 
 
ஒருபக்கம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரில் இருக்கும் போது இரண்டு திராவிட கட்சிகளும் அடுத்த தேர்தலுக்காக தங்களுடைய வேலையை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments