Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - அதிமுகவினர் மீசையை எடுக்கத் தயார்; சி.வி.சண்முகம்

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (08:49 IST)
காவிரி விவகாரத்தில் இதுவரை திமுக பிரயோஜனமாக எதையாவது செய்திருப்பதை நிரூபித்தால் அதிமுகவினர் ஒரு பக்க மீசையை எடுக்கத் தயார் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் சாலை மறியல் போராடங்களும், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததே திமுக தான். ஆனால் இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.

திமுகவினர் இதுவரை காவிரி விவகாரத்தில் எதையாவது பிரயோஜனமாக செய்திருப்பதை நிரூபித்தால் அதிமுகவினர் ஒரு பக்க மீசையை எடுக்கத் தயார் என திமுகவினருக்கு அமைச்சர் சவால் விடுத்தார். மேலும் திமுகவினரின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments