Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் மோதிக் கொண்ட அதிமுகவினர் கார்கள்! – மானாமதுரையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (11:27 IST)
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்காக பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பலரும் பசும்பொன் சென்றுள்ளனர்.

அதிமுக பிரபலங்களும் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பசும்பொன் சென்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோரது கார்களும், அவர்களது ஆதரவாளர்கள் கார்களும் மானாமதுரை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 10 கார்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்களுக்கு காயங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments