செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்து அதிரடி செய்துள்ளது.
இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்று தனது மனுவில் கூறியுள்ள அதிமுக, செந்தில்பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் என்றும் அதிமுக தனது மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,