Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ், எடப்பாடிக்கே அனைத்து அதிகாரங்களும் - தீர்மானம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:59 IST)
அதிமுக  கட்சியை வழி நடத்தும் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவர்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

 
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது. அதில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் முக்கியமாக, கட்சியை வழி நடத்த வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு அதிகாரம் பொருந்திய அந்த வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஒருவரை கட்சியில் சேர்க்கவோ, நீக்கவே ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கியமாக, பொதுச்செயலாளரின் அதிகாரம் ஒருங்கினைப்பு தலைவர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு  அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், கட்சி சட்ட விதி 19ல் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments