Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கொடும சார் இது... முஷரஃபிற்காக மனம் வருந்தும் அதிமுக அமைச்சர்!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (15:50 IST)
பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்-க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது ராஜேந்திர பாலாஜி வருத்தம்.
 
பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து அதிபரானார் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப். தன்னுடைய ஆட்சியின் 8 ஆவது ஆண்டில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன் பின்னர் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.
 
அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப்  2013 ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக முஷாரப் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார். 
 
இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முஷாரப் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்-க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது.  முஷாரப் எப்பொழுதும் பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments