Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ், ஈபிஎஸ்.. நகமும் சதையும் போல..! – சர்ச்சை குறித்து பொன்னையன் விளக்கம்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (15:13 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிமுக பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் “நகமும், சதையும் போல ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒற்றுமையாக உள்ளனர். ஒற்றைத் தலைமை குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். கட்சியின் நிலைபாடுதான் எனது நிலைப்பாடு, அதிமுகவில் எந்த பிளவும் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments