Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்பமனு கொடுக்கும் தேதியை திடீரென குறைத்தது அதிமுக!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:41 IST)
அதிமுகவில் விருப்ப மனு கொடுக்கும் தேதி திடீரென குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. திமுக உள்பட மற்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற்று விட்டு நேர்காணலை தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5ஆம் தேதிக்குள் விருப்பமனுவை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது
 
இதன்படி மார்ச் 3ஆம் தேதி தான் விருப்பமனு கொடுக்க கடைசி தினம் என்றும் அன்றைய தேதிக்குள் தமிழ்நாடு புதுச்சேரி கேரளாவில் போட்டியிட விரும்பும் மனு வாங்கியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமனு கொடுக்கும் தேதி இரண்டு நாள் குறைக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments