Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிற்கு ஓட்டு: வாட்டர் சப்ளை கட்; அதிமுகவினரின் மலிவான அரசியல்!

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (09:27 IST)
திமுகவிற்கு ஓட்டு போட்டதால் அதிமுகவினர் குடிநீர் சப்ளையை நிறுத்திவுள்ளதாக பார்த்திபன் எம்பியின் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். அவர், தொகுதி முழுவதும் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். 
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் முன்வைத்த குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தபின், சேலம் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் திமுகவிற்கு வாக்களித்த காரணத்திற்காக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.
 
அதிமுகவினர் கூறியதன் அடிப்படையில், டேங்க் ஆப்ரேட்டர்கள் இந்த காரியத்தில் செய்துள்ளனர். இது மிகவும் மலிவான அரசியல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக மக்களுக்கு தண்ணீர் கிடைத்திட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments