Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ஈபிஎஸ்.. லிஸ்ட் எடுக்க உத்தரவா?

Siva
திங்கள், 6 மே 2024 (09:24 IST)
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அதிமுக தலைமை உற்சாகமாக இருந்த நிலையில் தேர்தலுக்கு பின் வந்த ரிபோர்ட் பாசிட்டிவ்வாக இல்லை என்றும் வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில் கூட சரியாக வேலை செய்யாததால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து தலைமை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் யாரெல்லாம் யார் யாரெல்லாம் தேர்தல் வேலை சரியாக பார்க்கவில்லை? யார் யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக வேலை பார்த்திருந்தார்கள் என்ற லிஸ்ட் வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் தற்போது அந்த லிஸ்ட் எடுக்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தேர்தல் முடிவு வெளியானதும் அமைப்பு ரீதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அதற்காக தான் இந்த லிஸ்ட் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவு வெளியானதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கே ஆட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இந்த லிஸ்ட் தங்களை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் அதிமுக நிர்வாகிகளை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments