23 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தார் சசிகலா!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வழியெங்கிலும் சிறப்பான வரவேற்பை அமமுகவினர் அளித்தனர். ஆங்காங்கே சிலமணி நேரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் சென்னை வந்தடைந்தார்.
சென்னைக்கு வந்ததும் அதிகாலை 4 மணிக்கு அவர் ராமாபுரம் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து அவர் சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பெங்களூரிலிருந்து 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா என்பவரின் இல்லத்தில் சசிகலா வந்தடைந்ததார் என்றும், அங்குதான் அவர் தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சசிகலாவின் சென்னை வருகை அதிமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் வரும் வழி எங்கும் மலர்களை தூவி அமமுகவினர் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது