Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எஸ்.ஆர்.எம் மாணவர் தற்கொலை – விலகாத மர்மங்கள்?

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (15:36 IST)
சென்னையில் உள்ள தனியார் கலிவி நிறுவனமான எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் 4 ம் ஆண்டு ஐடி துறையில் படித்து வந்திருக்கிறார் கன்னியாக்குமரியை சேர்ந்த ராகவன் என்பவர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பியவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான சரியான காரணம் தெரியாத நிலையில் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த மே மாதம் பி.டெக் பயோமெடிக்கல் மாணவி அனுப்ரியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து தங்கி படித்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு கடந்த மூன்று மாதங்களில் மூன்று தற்கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்த சரியான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. இதனால் பல்வேறு மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments