Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (23:01 IST)
கரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்து மாவட்ட கட்சி அலுவகத்தில் ஆலோசனை கூட்டம்.
 
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழக அமைப்பு  தேர்தலானது தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. 
 
அதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் உள்பட 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல் வருகின்ற 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
 
மேலும் கரூர் மாவட்டத்திற்கு கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர், வரகூர் அ.அருணாச்சலம் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் R.T. ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கழக அமைப்பு தொடர்பாக இன்று 25.03.2022 வெள்ளிக்கிழமை கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் கழக அமைப்புத் தேர்தல் குறித்து  கரூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்பு தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியும் கழகத் தொண்டர்கள் கழக அமைப்பு  தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக, நகர கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments