Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது..!

Siva
புதன், 8 ஜனவரி 2025 (07:52 IST)
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக நிர்வாகி  மற்றும் ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சதிஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில், அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்