Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டு சட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவிப்பு

Mahendran
புதன், 24 ஜூலை 2024 (20:09 IST)
சட்டப் பிரிவில் 3 ஆண்டு LLB, LLB(Hons.) படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் முறையே மூன்றாண்டு எல்.எல்.பி. மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.07.2024 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஜூலை 4 முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments