Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அம்பேத்கர் ஓவியம் அவமதிப்பு.. மக்கள் சாலை மறியல்

அம்பேத்கர் ஓவியம் அவமதிப்பு.. மக்கள் சாலை மறியல்

Arun Prasath

, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (09:48 IST)
மேலூரில் அம்பேத்கர் சுவர் ஓவியத்தை அடையாளம் தெரியாத நபர்கள் அவமதித்ததை தொடர்ந்து, மர்ம நபர்களை கண்டுபிடித்து தருமாறு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 60 வருடங்களாக சாதி வெறி கும்பலால் இந்தியா முழுவதும் அம்பேதகர் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் பட்டியலின ஜாதிகளின் தலைவர் என போலியான பிம்பம் சமூகத்தில் இருப்பதால், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மோதல் வரும்போது, அம்பேத்கர் சிலைகள் தாக்கப்படுகின்றன.

இந்நிலையில் மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், அம்பேத்கர் ஓவியத்தை அவமதித்த மர்ம நபரை கண்டுபிடிக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என்பதை மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், பரப்புரை செய்யாததே அம்பேத்கர் உருவப்படங்களை அவமானப்படுத்துவதற்கு காரணம் என சிலர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்!!