Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளம் அதிகமா கேக்குதோ? ஆசிரியர்களை வெளுத்து வாங்கும் ராணுவவீரர்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (14:59 IST)
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை ராணுவ வீரர் ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.


கடந்த ஒரு வாரமாக ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் அரசுப்பணிகளும், பள்ளிப்பணிகளும் பெரும் பாதிப்பில் உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
இந்நிலையில் ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் உங்களுக்கு சம்பளம் அதிகமா கேக்குதோ? நீங்க அப்படி என்ன வேல பாக்குறீங்க உங்களுக்கு சம்பளம் அதிகமா கொடுக்குறதுக்கு. சம்பளம் அதிகமா வேணும் தான் தனியார் ஸ்கூல வேல பாருங்க. இதுல எத்தன பேரு அவுங்க பசங்கல அரசு பள்ளில படிக்க வச்சுட்டு இருக்கீங்க?
 
நாங்க உங்களுக்கு ஆதரவு கொடுக்கனுமா? நீட் தேர்வுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிச்சபோது நீங்கல்லாம் எங்க போனீங்க? இப்போ உங்களுக்கு ஒன்னுன்னா கொதிக்கிறீங்க. இவங்களையெல்லாம் அரசாங்கம் விடகூடாது. எல்லாத்தையும் உடனடியாக வேலையிலிருந்து தூக்கனும் என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments